மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

A.Vikranth Raja IAS

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு. அ. விக்ரந்த் ராஜா இ.ஆ.ப அவர்கள் 2015 ஆம் ஆண்டு அணியைச் சார்ந்த இந்திய ஆட்சி பணியாளர்.

27.10.2017 அன்று காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியராக பதவியேற்று திறம்பட செயல்பட்டதோடு அல்லாமல், கோயில்களின் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி 19.12.2017 அன்று நடந்தேறிய சனிப்பெயற்சி விழாவினை மிகச்சிறப்பான முறையில் நடத்தி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டையும் பெற்றார். மேலும், ஜெயப்பிரகாஷ் நாராயணண் கூட்டுறவு நூற்பாலையின் மேலாண்மை இயக்குநராக திறம்பட செயல்பட்டு ஆலையை தொடர்ந்து இயக்கச்செய்து ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்து அவர்களின் பாராட்டை பெற்றவரானார் மற்றும் 16.11.2018 அன்று கோரத்தாண்டவமாடிய கஜா புயலின்போது பொதுமக்களை காக்கும் நோக்குடன் புயல் முன்னேற்பாடு நடவடிக்கைகள், புயலால் பாதிப்படைந்த மக்களை மீட்டல், பாதுகாத்தல் முதலிய செயல்களில் மாவட்ட ஆட்சியருக்கு தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து, 11.01.2019 அன்று காரைக்கால் மாவட்டத்தின் 13 வது ஆட்சியராக பதவியேற்று மக்கள் நலனை மையப்படுத்தும் நோக்கத்துடன் மாவட்ட வளர்ச்சிப் பணிகளை செயல் படுத்தி வருகிறார்.

தொலைபேசி : +91-4368-221580(அலு.)
சொலைபேசி: +91-4368-222025(தனி)
தொலைநகல்: +91-4368-228070
மின்னஞ்சல் : collr[dot]kkl[at]nic[dot]in