மீன் வளம் மற்றும் மீனவர் நலன்
24 கிமீ தொலைவு கொண்ட கடற்பகுதியும் அதனை நம்பி வாழும் 10 மீனவ கிராமங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளது. ஏறத்தாழ 3000 மீனவ குடும்பங்கள் மீன் பிடித்தொழிலை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். அவர்கள் வாழ்வின் தரத்தை உயா்த்தவும், மக்கள் நலம் பெறும் வண்ணம் அதன் உற்பத்தியை அதிகபடுத்தவும், 1955 இல் இதற்காக ஒரு மீன் வளத்துறை என்ற இலாக்கா ஆரம்பிக்கப்பட்டு செயல் பட்டுவருகிறது. அதுமுதல், புதுவை அரசால் மீனவா் நலனுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவா்கள் டீசல், படகு, மற்றும் வலைகள் முதலியன மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மீனவா் முன்னேற்ற முகமை, மீனவா் கூட்டுறவு சங்கம் முதலியவை அவா்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பனிக்கட்டி உற்பத்தியகங்கள் அமைத்து மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. சுருக்கமாக சொல்வது என்றால் காரைப்பகுதியானது இந்திய வரைப்படத்தில் கடல்சார் உற்பத்தியில் ஒரு முக்கிய இடத்தை விரைவில் அடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.