மூடு

உள்கட்டமைப்பு

பொதுப்பணித்துறையின் உட்பிரிவான  நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரம் ஒரு செயற்பொறியாளர் தலைமையில் காரைக்காலில் செயல்பட்டு வருகிறது. இது  காரை நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதி முழுவதிலும் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியினை அமைத்து அதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. குடிநீர் தேவையை காவிரி நீர் பெறும் பகுதி பூர்த்தி செய்கிறது. இதுதவிர பற்றாக்குறையை நிறைவு செய்ய ஆழ் குழாய் அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீர் பெறப்பட்டு மக்களுக்கு தரப்படுகிறது. அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் உடைப்புகள் சரி செய்யப்பட்டு தடையில்லா குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

பொதுப்பணித்துறையின் மற்றொரு உட்பிரிவான சாலை மற்றும் கட்டிடப்பரிவு ஒரு செயற்பொறியாளர் தலைமையில் செயல்படுகிறது. இதன் மூலம் சாலைகளும், பாலங்களும் அமைக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது. இது தவிர, இத்துறை அரசு அலுவலகங்கள் புதிதாக கட்டவும், பள்ளிக்கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாணவர்கள் நலன் கருதி ஓலைக் குடிசையில் இயங்கி வந்த பெரும்பாளான வகுப்புகள் காங்கிரீட் தளமிட்ட பள்ளி வகுப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் எழை, எளிய மாணவர்கள் பலன் அடைந்துள்ளார்கள்.