மூடு

தொழிலகம் மற்றும் வணிகம்

விவசாயம் மட்டும் அல்லாமல் தொழில் துறையிலும் இப்பகுதி விரைவான வளா்ச்சி பெற்றுவருகிறது. இதனை ஊக்குவிக்கும் பொருட்டு புதுவை அரசு புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பல வகையில் சலுகைகளும் நீண்ட காலத்திற்கு வரிவிலக்கும் அளித்துவருகிறது. இதனை பயன்படுத்திக்கொண்டு ஏராளமான தொழில் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை இங்கே அழைத்து நடத்தி வருகின்றன. காரைப்பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகளில் முக்கியமானவை செளந்தரராஜா மில்ஸ், ஹென்கல் ஸ்பிக், ஜான்சன் ஓடுகள், ரெக்மா ஓடுகள், முருடேஸ்வர் செராமிக்ஸ், கெம்பிளாஸ்ட், காரைக்கால் குளோரேட்ஸ் இன்னும் பல. இதுதவிர வாஞ்சூரில் துறைமுகம் ஒன்று தனியாரால் (Marg)  ஆரம்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. இதன்மூலம் இறக்குமதியாகும் நிலக்கரியானது ரயில் மூலமும் லாரிகள் மூலமும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதுதவிர ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலையும், மின்சாரம் உற்பத்தி செய்யும் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற  தொழிற்சாலையும் புதுவை அரசால் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. மேலும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் இங்கே தங்களுடைய தலைமை அலுவலகத்தை நிரவிப்பகுதியில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. மாவட்ட தொழில்மையம் ஒன்று 1978 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதன் வழியாக வேலையில்லாத இளைஞர்களுக்கு தேங்காய் நாறில் கயிறு தயாரித்தல், பாய் தயாரித்தல் மற்றும் துறைகளில் ஊக்கத் தொகையுடன் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன் மூலம் அரசு வங்கிகளில் கடன் பெறவும் உதவி செய்கிறது. அதன் மூலம் பயனாளிகள் தாங்களே சுயமாக பொருள் ஈட்டவும் ஊக்குவிக்கிறது.