மூடு

வருவாய் நிருவாகம்

காரைக்கால் வருவாய் மாவட்டத்தை சார்பு ஆட்சியர் அல்லது உதவி ஆட்சியர் (வருவாய்) நிர்வாகிக்கிறார். சில முக்கிய முடிவுகள் எடுக்கும் முன் மாவட்ட ஆட்சியரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார். செயலருக்கு அனுப்பும் கோப்புகளை மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் அனுப்புவார். காரைக்கால் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரிக்கப்பட்டு ஒன்று காரைக்காலை தலைமையிடமாகவும் மற்றொன்று திருநள்ளாரை தலைமையிடமாகவும் கொண்டு தனித்தனி வட்டாச்சியரின் கீழ் செயல்படுகிறது.

சார்பு ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் கீழ்கண்ட அலுவலகங்களுக்கு இணைப்பு அதிகாரியாக செயல்படுகிறார்.

  • நிலஅளவை மற்றும் நிலபதிவேடுகள் துறை
  • சார்பு பதிவாளர் அலுவலகம்
  • எடைகளும் அளவுகளும் சரிபார்க்கும் துறை

மேலும் சார்பு ஆட்சியர் உட்பிரிவு குற்றவியல் நீதிபதியின் பணியினையும் தன் பணியுடன் சேர்த்து கவனிக்கிறார். இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டவிதிகளின் அடிப்படையில் வழங்கபடும் அதிகாரத்தை அவர் செயல்படுத்துகிறார். வட்டாச்சியர் குற்றவியல் நீதிபதியாக செயல்படுகிறார். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு தன் பணியை மேற்கொள்கிறார்.


வருவாய் பிரிவு
பெயர் மொத்தம்
வட்டம் 2
உள்வட்டம் 6
கிராமம் 37
வட்டம்
வரிசை எண் வட்டத்தின் பெயர் உள்வட்டத்தின் எண்ணிக்கை கிராமத்தின் எண்ணிக்கை
1. காரைக்கால் 4 21
2. திருநள்ளார் 2 16
உள்வட்டம்
SNo. வட்டத்தின் பெயர் உள்வட்டத்தின் பெயர் கிராமத்தின் எண்ணிக்கை
1. காரைக்கால் காரைக்கால் 6
2. காரைக்கால் கோட்டுச்சேரி 5
3. காரைக்கால் நிரவி 5
4. காரைக்கால் திருபட்டினம் 5
5. திருநள்ளார் திருநள்ளார் 11
6. திருநள்ளார் நெடுங்காடு 5
வருவாய் கிராமங்கள்
SNo. வட்டத்தின் பெயர் உள்வட்டத்தின் பெயர் கிராமத்தின் பெயர்
01. காரைக்கால் காரைக்கால் 14-கீழகாசாக்குடி
02. காரைக்கால் காரைக்கால் 23-தலத்தெரு
03. காரைக்கால் காரைக்கால் 24-கீழவேளி
04. காரைக்கால் காரைக்கால் 25-கோவில்பத்து
05. காரைக்கால் காரைக்கால் 27-தருமபுரம்
06. காரைக்கால் காரைக்கால் 28-காரைக்கால்
07. காரைக்கால் கோட்டுச்சேரி 9-வரிச்சிக்குடி தெற்கு
08. காரைக்கால் கோட்டுச்சேரி 10-வரிச்சிக்குடி வடக்கு
09. காரைக்கால் கோட்டுச்சேரி 11-பூவம்
10. காரைக்கால் கோட்டுச்சேரி 12-திருவேட்டக்குடி
11. காரைக்கால் கோட்டுச்சேரி 13-கோட்டுச்சேரி
12. காரைக்கால் நிரவி 19-விழிதியூர்
13. காரைக்கால் நிரவி 29-ஓடுதுரை
14. காரைக்கால் நிரவி 31-நிரவி
15. காரைக்கால் நிரவி 30-கீழமணை
06. காரைக்கால் நிரவி 32-அக்கரைவட்டம்
17. காரைக்கால் Tதிருபட்டினம் 33-கீழையூர் வடக்கு
18. காரைக்கால் திருபட்டினம் 34-திருபட்டினம்
19. காரைக்கால் திருபட்டினம் 35-போலகம்
20. காரைக்கால் திருபட்டினம் 36-கீழையூர் தெற்கு
21. காரைக்கால் திருபட்டினம் 37-வாஞ்சூர்
22. திருநள்ளார் திருநள்ளார் 1-அம்பகரத்தூர்
23. திருநள்ளார் திருநள்ளார் 2-நல்லெழந்தூர்
24. திருநள்ளார் திருநள்ளார் 3-சேத்தூர்
25. திருநள்ளார் திருநள்ளார் 4-தேவமாபுரம்
26. திருநள்ளார் திருநள்ளார் 16-சுரக்குடி
27. திருநள்ளார் திருநள்ளார் 17-தென்னங்குடி
28. திருநள்ளார் திருநள்ளார் 18-செல்லூர்
29. திருநள்ளார் திருநள்ளார் 20-பேட்டை
30. திருநள்ளார் திருநள்ளார் 21-திருநள்ளார்
31. திருநள்ளார் திருநள்ளார் 22-சுப்புராயபுரம்
32. திருநள்ளார் திருநள்ளார் 26-கீழாவூர்
33. திருநள்ளார் நெடுங்காடு 5-நெடுங்காடு
34. திருநள்ளார் நெடுங்காடு 6-குரும்பகரம்
35. திருநள்ளார் நெடுங்காடு 7-பொன்பேத்தி
36. திருநள்ளார் நெடுங்காடு 8-புத்தக்குடி
37. திருநள்ளார் நெடுங்காடு 15-மேலகாசாக்குடி