மூடு

தொடர்புகள்

சாலைவழிகள்

தேசிய நெடுஞ்சாலைகள் கிழக்குகடற்கரை சாலை – N.H.47A:

  1. காரைக்கால் – நாகூர் சாலை
  2. காரைக்கால் – பொறையார் சாலை
  3. காரைக்கால் – அன்னவாசல் சாலை

முக்கிய மாவட்ட சாலைகள்:

  1. காரைக்கால் – அம்பகரத்தூர் சாலை
  2. காரைக்கால் – நெடுங்காடு சாலை

பிற மாவட்ட சாலைகள்

  1.  நிரவி முதல் சாலை
  2.  நிரவி இரண்டாம் சாலை
  3. திட்டச்சேரி சாலை
  4. லெமர் சாலை
  5. சேசமுல்லை சாலை
  6. கடற்கரை சாலை
  7. சுரக்குடி சாலை
  8. அகலங்கன்னி சாலை
  9. நல்லாத்தூர் சாலை

கிராம சாலைகள்

  1. தருமபுரம் சாலை
  2. காரைக்கால்மேடு சாலை
  3. கோட்டுச்சேரி-வடமட்டம் சாலை
  4. கோட்டுச்சேரி முக்கிய சாலை

பொது போக்குவரத்து

முன்னர் இப்பகுதியை சேர்ந்த மக்கள் அண்டை மாநிலமான தமிழ்நாட்டையே தங்கள் பயணத்தேவை பூர்த்தி செய்ய நம்பிருந்தார்கள். தற்போது அந்த நிலைமாறி தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகங்கள் தங்கள் பேருந்துகளை இப்பகுதியிலிருந்து தென்னகத்தின் பெரும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஏற்பாடுசெய்துள்ளது. தவிரவும் புதுவை மாநில போக்குவரத்துக்கழகம் காரையிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தவிரவும் தனியார் பேருந்துகளும் பெருமளவில் இயங்கி வருவதாக இப்பகுதி மக்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காரைப் பகுதியில் அமைந்துள்ள திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து அருள்பாளித்துவரும் சனீஸ்வரபகவானை தரிசிக்க ஆண்டுமுழுவதும் வெளிமாநிலங்கலிருந்து வருவதால் இந்தப்பகுதியின் பொருளாதாரம் பெறுமளவில் வளர்ச்சிப் பெற்றுள்ளது. சாலை மட்டும் இல்லாமல் புகை வண்டிகளும் பெறுமளவில்இப்பகுதியிலிருந்து அண்டை மாநிலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சிராப்பள்ளி, வேளாங்கண்ணி, எர்ணாகுலம், மும்பை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து புகைவண்டிகள் இயக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறை

காரைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தோடு 1975 ஆம் ஆண்டு ஒரு துறை ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் வெளிமாநிலங்களில் வசிப்போருக்கு இங்குள்ள முக்கிய பகுதிகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்துச்சொல்லப்படுகிறது. இங்குள்ள முக்கிய கோயில்களைப்பற்றியும் இதன் அருகில் அமைந்துள்ள நாகூர், வேளாங்கண்ணி, தரங்கம்பாடி ஆகிய ஊர்களின் முக்கியத்துவம் இத்துறைமூலமும் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. வார இறுதி நாட்களில் இப்பகுதியில் குவியும் வெளியூர் மக்களின் தேவைகளை இத்துறை பூர்த்தி செய்கிறது.

தபால், தந்தி மற்றும் தொலைபேசி

காரைப் பகுதியில் ஒரு தலைமை தபால் நிலையம் செயல்படுகிறது. கிளை தபால் நிலையங்கள் ஏனைய கிராமப் பகுதிகளில் செயல்படுகிறது. மக்களிடம் பெரும் தபால்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியையும் வெளியூரிலிருந்து காரைப்பகுதிக்கு வரும் தபால்கள் மற்றும் பார்சல் போன்றவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் இத்துறை முயற்சி மேற்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுசேமிப்பு, தொடர் சேமிப்பு, நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை மக்களிடமிருந்து பெற்று அதன் முதிர்வு காலங்களில் தாமதமின்றி உடனுக்குடன் உரியவர்களுக்கு அளிக்கும் இதன் பணி மகத்தானது.

தொலைபேசி சேவை

பாரத் சஞ்சார் காப் லிமிடெட் என்ற மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனம் தங்கள் அலுவலகம் மூலம் மக்களின் தொலைத் தொடர்பு சேவையை மக்களுக்கு வழங்கிவருகிறது. கைபேசி இணைப்புகளும் அதன் சார்ந்த சேவைகளையும் இது செய்கிறது.

கணினி மற்றும் இணையதள சேவை

கணினி மற்றும் இணையதள சேவை மூலம் காரைப் பகுதிகளில் இயங்கும் அனைத்து அரசுத்துறைகளை இணைப்பதற்கான 1988 ஆம் ஆண்டு கணினி மையம் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது. இது மாவட்ட நிர்வாகம் திறன்பட செயல்படவும் விரைவான சேவைகளை மக்களுக்கு அளிக்கவும் பெறும் உதவியாக செயல்படுகிறது.

அகில இந்திய வானொலி நிலையம்

காரைக்காலில் அமைந்துள்ள வானொலி நிலையம் மக்களுக்கு பலன் தரும் பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பிவருகிறது. காரைப்பகுதி மட்டுமல்லாமல் இதன் அருகில் உள்ள தமிழகப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு இதன்சேவை அமைந்துள்ளது. அவசர காலங்களிலும் புயல் மழை வெள்ளக் காலங்களில் மக்களுக்கு வானிலை சம்பந்தமான எச்சரிக்கைகளை உடனக்குடன் அளித்து அவர்களுக்கு மகத்தான சேவை செய்கிறது.

துறைமுகமும் மற்றும் கலங்கரை விளக்கமும்

மீன்பிடித்துறைமுகம் ஒன்று இங்கு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. இதன்மூலம் இப்பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை இங்கே நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் சுற்றுப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இங்கே கொண்டு வந்து ஊர்திகள் மூலம் மற்ற ஊர்களுக்கு மீன்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இந்தப் பகுதிகளை கடக்கும் கப்பல்களுக்கு கரையை புலப்படுத்தும் வண்ணம் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருந்து அது பழுது படவே தற்போது புதுப்பொளிவுடன் நவீனவசதிகளுடனும் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு நகருக்கு கடல்கரைக்கு வழிகாட்டி வருகிறது.