மூடு

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வது போல உடல்நலம் நன்கு இருந்தால் தான் அமைதியான வாழ்வை வாழமுடியும். இதனை கருத்தில் கொண்டு பதுவை அரசு காரைக்காலில் ஒரு தலைமை மருத்துவமனையை எல்லா நவீன வசதிகளுடன் அமைத்துள்ளது. இதுதவிர திருநள்ளாரில் சமுதாய நல மையமும் பதினொரு அடிப்படை நல மையமும், பதினேழு உதவி மையங்களும் புதவை அரசால் காரைக்கால் மாவட்டத்தில் நிறுவப்பட்டு மக்களுக்கு பணியாற்றி வருகிறது. தொழிலாளர் நலனுக்காக ஒரு மையம் நெடுங்காட்டில் இயங்கி வருகிறது. மலேரியா, கொசு ஆகியவை பரவாமல் தடுப்பதற்கான நோய்தடுப்பு மையம் ஒன்று ஒரு துணை இயக்குநரின் கீழ் இயங்கி வருகிறது. தனியார் துறையில் செயல்படும் விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி ஒன்றும் இப்பகுதியில் செயல்படுகிறது. புதுச்சேரியில் இயங்கி வரும் பெருமை வாய்ந்த மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி அதன் கிளையை காரைக்காலில் துவக்கி உள்ளது.