மூடு

தொலைநோக்குப் பார்வை

காரை வாழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டு எல்லாத்துறைகளிலும் ஒட்டு மொத்த வளர்ச்சி பணியிணை மேற்கொணடு அதன்வழியாக அமைதியான சூழலை உருவாக்கி பராமரித்தல்.

காரைவாழ் மக்களுக்கு தேவையான, திறமையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய சேவையை வழங்கும் வண்ணம் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, கட்டுப்படுத்தி இணக்கமான அணுகுமுறையுடன் பணியை செயல்படுத்துதல்.

சட்டம், ஓழுங்கு பராமித்தல் :

 • மாவட்ட நீதிபதியின் அதிகாரத்தை பயன்படுத்துவதன் வழியாக சட்டம் ஓழுங்கு பராமரித்தல்.
 • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினை நிர்வகித்தல் மற்றும் அதற்கு முழு ஒத்துழைப்பு நல்குதல் மேலும் காரைக்கால் பகுதியின் வருவாயை கண்காணித்தல்.

பொது நிர்வாகப்பணிகள் ( செலவின நிதி ஒப்பளிப்பு ) :

காரைப்பகுதியில் இயங்கும் பல துறைகளிடமிருந்து பெறப்படும் செலவின நிதி ஒப்பளிப்பு முன்பொழியை பரிசீலித்து அது முழுமையானதாக அமையும் பட்சத்தில் அதன் மதிப்பு ஒரு கோடியை மிகாமல் இருந்தால் அதற்கான நிதி ஒப்பளிப்பு கொடுக்கப்படும். மேலும் காரைப்பகுதியில் இயஙகும் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்கள் தங்கள் சேம நல நிதியிலிருந்து ஒரு பகுதியினை எடுத்துக்கொள்ளப் பெறப்படும் பிரேரணைகளை நன்கு ஆராய்ந்து அது எல்லாவிதத்திலும் முறையாக இருப்பின் தகுந்த ஒப்பளிப்பு அளிக்கப்படும்.

 

பணியாளர் நிர்வாகம் :

 • அமைச்சக மற்றும் பொதுப்பிரிவு பணியாளர்களை  கலந்தாய்வு முறையில் அவர்கள் விரும்பும் துறைக்கு பணியிடைமாற்றம் செய்தல்.
 • காரை மாவட்டத்தில் உள்ள காலிப்பணி இடங்களை அவ்வப்போது கண்டறிந்து அதை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
 • மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்படும் காரணத்தால், பல்வேறுத்துறை அரசுத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள் நடத்துதல்.
 • தலைமை அலுவலர்கள் காலிப்பணியிடங்கள்  நிரப்பும் வரை அதன் பொறுப்புகளை ஏற்று நடத்துதல்.

வளர்ச்சிப்பணிகள் :

 • காரைப்பகுதியில் இயங்கும் பல துறைகளின் வளர்ச்சிப் பணிகளை மறு ஆய்வு செய்தல் மற்றும் அதணை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தல்.
 • ஒவ்வொரு துறைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் திட்டம் சார்ந்க பனிகள் மறையாக நடைபெறுவதற்கும் அதனை சிறப்பாக நிறைவேற்றவும் ஒருங்கிணைப்புக்கூட்டங்கள் நடத்துதல்.
 • புதிய கருத்துருக்கள் தயாரித்தல், நடப்பில் உள்ள கருத்துருக்களை மறு ஆய்வு செய்தல் மற்றும் பலவகையான வளர்ச்சிப்பணிகளை கண்காணித்தல்.

 

மின்-ஆளுமைச் செயல்பாடுகள் :

 • காரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்துத்துறை செயல்பாடுகளையும் மின்-ஆளுமையின் கீழ் கொண்டு வரும் பொருட்டும் அதன் வழியாக திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்றிடவும் காரை மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு காரைக்கால் மாவட்ட மின்-ஆளுமைக் குழுமம் தொடங்கி செயல்பட்டு வருகிறது.
 • மாநில தகவல் தொழில் நுட்ப இயக்குனரகத்தின் உதவியுடன் காரைக்காலில் இயங்கி வரும் பெரும்பாலான அரசுத்துறைகளுக்கும் இணைய தள வசதியை வழங்கும் வண்ணம் கணினி உள்கட்டமைப்பான வலைப்பிண்ணலை அமைத்துக்கொடுத்தல்.
 • மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் தேசிய தகவலியல் மையத்தின் உதவி கொண்டு மத்திய மற்றும் மாநில தலைமை இயக்குனரகத்தால் துவங்கப்படும் அத்துறைக்கான கணினிமயமாக்கல் முறைமையை இம்மாவட்டத்திலும் இயங்க வழிவகை செய்யப்படுகிறது.
 • காரை மாவட்ட தேசிய தகவலியல் மைய தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி காணொளி காட்சி மூலம் மேதகு துணை நிலை ஆளுனர் முன்னிலையில் பொதுமக்கள் குறைகேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
 • காரை மாவட்டத்தின் நகர மற்றும் கிராம  புறங்களில் பொது சேவை மையங்களை நிறுவி அரசாங்க சேவைகளான பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், பட்டா நகல், நில வரைபடம், ஆதார் அட்டை முதலியன அவரவர் இடங்களில் கிடைக்க ஆவண செய்வதோடன்றி வருங்காலங்களில் இன்னும் அதிகமான சேவைகள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
 • மத்திய அரசு அறிமுகம் செய்த பணமில்லா பரிவர்த்தனை முறையினால் காரை வாழ் மக்கள் இன்னலுறாமலிருக்க அதுச்சார்ந்த வல்லுனர்களை கொண்டு விழிப்புணர்வு இயக்கங்களை அனைத்து கிராமங்களிலும் நடாத்தி மக்கள் பயனுறச் செய்தல்.
 • பொது மக்களும் வணிகப்பெருமக்களும்  பயனுறும் வகையில் இணைய வழி சேவைகள் மற்றும் இணைய வழி பரிவர்த்தனைகளை அரசாங்கத் துறைகளான வணிக வரித்துறை, போக்கு வரத்துத் துறை, பதிவாளர் அலுவலகம், மின் துறை, கலால் துறை போன்றவற்றில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

மக்கள் குறை தீர்த்தல் :

மாவட்ட ஆட்சியரகம் இங்கு உள்ள அனைத்துத் துறைகளையும் கண்காணிக்கும் தலைமை பொறுப்பு வகிக்கின்ற காரணத்தால் எல்லாத்துறைகளிலும் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அவர்களை அழைத்துப்பேசி சுமூக தீர்வு காணுதல்.

தேர்தல்கள் :

 • காரை மாவட்ட ஆட்சியர் காரை மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு தேர்தல் பணிகள் செவ்வனே நடைபெற உறுதிசெய்கிறார். அரசாங்கத்தால் உருவாக்கப்படும் பல குழுக்களுக்கு தலைவராகவும் உறுப்பினராகவும் செயல்படுதல்.
 • மற்ற இலாக்காகலுடன் இணக்கமான நடவடிக்கைகள் :
 • மிக மிக முக்கியமான அரசு விருந்தினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் காரைப்பகுதிக்கு வரும்போது அவர்களை உரியமுறையில் உபசரித்தல்.
 • மற்றத்துறைகளை ஒருங்கிணைத்து அதன் ஒத்துழைப்புடன் தேசியதினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், தியாகிகள் தினம் மற்றும் பிற தேசிய தினங்களை சிறப்பாக கொண்டாடுதல்.
 • மேனிலைப்பள்ளியில் முதலாமாண்டு சேர விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு அவர்களை விரும்பிய பாடப்பிரிவுகளில்  கலந்தாய்வு  முறையில் தேர்வு செய்தல்.
 • கேளிக்கை நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் மற்றும் உள்ளூரில் நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளாகிய சனி்ப்பெயர்ச்சி, மாங்கனித்திருவிழா, கந்தூரி, விநாயகர் சதுர்த்தி, தேற்றரவு அன்னை ஊர்வலம் மற்றும் இதர விழாக்களை அது தொடர்பான துறைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்துதல்.