மூடு

மேற்கொள்ளும் பணிகள்

  • மக்களுடைய புகார் மனுக்களைப் பெற்று அதற்கான உரிய மேல் நடவடிக்கை  எடுத்தல்.
  • காரைப்பகுதியில் பணியாற்றும் C மற்றும் D பிரிவு பணியாளர்களிடமிருந்து வரும் சேம நல நிதியிலிருந்து முன் பணம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கான ஆணைகளை பிறப்பித்தல் மற்றும் நிதி ஒப்பளிப்பு முன்மொழிதலை பரிசீலித்து அது முழுமையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான நிதி ஒப்பளிப்பு கொடுக்கப்படும்.
  • காரைப்பகுதியில் பணியாற்றும் C பிரிவு பணியாளர்களை கலந்தாய்வு முறையில் அவர்கள் விரும்பும் துறைகளுக்கு பணியிடை மாற்றம் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  • காரைப்பகுதிக்கான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பணியை கண்காணித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
  • மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வாக்குச்சாவடிகள் அமைப்பதிலிருந்து தேர்தல் சம்பந்தமான அனைத்துப் பணிகளையும் கவனித்தல்.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இசைவு சீட்டு வழங்குதல், காவல்துறை விசாரணையை பரிசீலித்தல் மற்றும் தேவையான பத்திரங்களை உள்துறைக்கு அனுப்புதல்.
  • நன்னடத்தை சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை பரிசீலீத்து அதற்கான மேல் நடவடிக்கை எடுத்தல்.
  • அரசு போட்டித்தேர்வுகள் நடத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல்.
  • விடுதலை போராட்ட வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், பயணச்சலுகை சீட்டு, ஓய்வூதியம் சம்பந்தமான குறைகளை நிவர்த்தி செய்தல், ஈமச்சடங்கு செலவினை அவர்கள் வாரிசுக்கு வழங்குதல், அவர்கள் வாரிசுகளுக்கு தக்க சான்றிதழ் வழங்குதல் போன்றன.