மின்சாரம்
காரைக்காலில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கும், வீட்டு உபயோகத்திற்கும் தேவையான மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்குவதற்காக ஒரு செயற்பொறியாளர் தலைமையில் மின்சார இலாக்கா தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நமக்கு தேவையான பெரும்பகுதி மின்சாரம் அண்டை மாநிலமான தமிழ் நாட்டிலிருந்து பெறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு காரைப் பகுதிலேயே மின்சார உற்பத்தி நிலையம் திருப்பட்டினம் போலகத்தில் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் 32.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் காரைப்பகுதியில் நிலவும் மின்பற்றாக்குறை ஓரளவு சரி செய்யபடுகிறது. இதுதவிர மின் விநியோகத்தை சீராக்கி வழங்கிட பிள்ளைத் தெரு வாசல் கிராமத்தில் ஒரு மின்சாரதுணை நிலையம் ஏற்படுத்தப்பட்டு இயங்கிவருகிறது. இதன் திறன் 110/122 மெகாவாட், காரைக்காலில் இயங்கும் மின்துறையானது காரை வாழ் மக்களுக்கும் இப்பகுதியில் இயங்கும் தொழில்சாலைகளுக்கும் தமிழ் நாட்டிலிருந்து பெறப்படும் மின்சாரம் மற்றும் உள்ளூரில் உற்பத்தி செயப்படும் மின்சாரத்தையம் பகிர்ந்து அளித்து மின்வெட்டு இல்லாத பகுதியாக விளங்குவதற்கு உதவி செய்கிறது. அவ்வப்போது ஏற்படும் மின் தடைகளை ஊழியர்களைக் கொண்டு உடனுக்குடன் சரி செய்து பொது மக்களுக்கு உதவி செய்கிறது.