மூடு

வங்கிகள், வர்த்தகம் மற்றும் வணிகம்

பழைய நாட்களில் இந்தப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் பணத் தேவைகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களை நம்பி இருந்தார்கள். விவசாயத்தையே பெரும்பகுதி மக்கள் நம்பி இருந்ததால் அவர்கள் இன்னல்கள் அடைந்தனர். இதனை போக்குவதற்காக அரசாங்கத்தின் உதவியால் 1975 ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இப்பகுதியில் மூன்று கிளைகளை தொடங்கியது. பின்னர் பாரத ஸ்டேட் பாங்கும் தங்கள் கிளைகளை இங்கே அமைத்தன. தற்போது ஏராளமான தனியார் வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் இப்பகுதியில் தங்கள் கிளைகளை அமைத்து நடத்திவருகின்றன. இதன்காரணமாக மக்கள் தங்கள் தேவைகளுக்கு மிக குறைந்த வட்டியில் பணம்பெற்று பயன்பெறுகின்றனர். இதுதவிர மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு கல்விக்கடன் பெற்று பயன்பெறுகின்றனர்.