கல்வி மற்றும் கலாச்சாரம்
காரைப்பகுதி படித்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியில் செயற்படும் கல்வித்துறை தங்களுடைய இடைவிடா முயற்சியின் பலனாக பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்துவோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தள்ளதுடன் படித்தவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 20 மேனிலைப்பள்ளிகள், 43 உயர்நிலைப்பள்ளிகளும், 24 நடுநிலைப்பள்ளிகளும் செயல்படுகிறது. இதுதவிர தனியார் பள்ளிகளும் இப்பகுதியில் அதிகமாக செயல்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான பள்ளிகள தமிழ்நாடு கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் சில பள்ளிகள் மத்திய கல்வி வாரிய பாடத்தின் கீழும் செயல்படுகிறது. மத்திய அரசால் நடத்தப்படும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று இங்கே செயல்படுகிறது.
மேனிலைக்கல்லூரியை பொறுத்த மட்டில், இரண்டு அரசுக்கலைக்கல்லூரிகளும் முறையே அவ்வையார் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி செயல்படுகிறது. மேலும் தொழிற்படிப்புக்காக ஒரு விவசாயக்கல்லூரி பண்டிட் ஜவஹர்லால் நேரு விவசாய கல்லூரி, பெருந்தலைவர் காமராஜர் தொழிற்நுட்ப கல்லூரி, இந்திய தொழிற்நுட்ப கல்லூரி, இரண்டு பல்நுட்ப தொழிற்கல்லூரி, கல்வியியல் கல்லூரி, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு மையம் போன்றவைகளும் செயல்பட்டு இம்மாவட்ட மக்களின் கல்வித்தேவையை பூர்த்தி செய்கின்றன.
நூலகங்கள்
மக்களின் வாசிக்கும் வழக்கத்தை ஊக்கப்படுத்தவும் தங்களுடைய பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் காரைப்பகுதியில் ஒரு தலைமை நூலகமும் இதை சுற்றி அமைந்துள்ள 18 கிராமப் பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டுவருகிறது. இது கலை மற்றும் பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படுகிறது.
போட்டித்தேர்வுகளுக்கும், நுழைவுத்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் படுத்தும் வகையில் சிறப்பு பயிற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நல் வாய்ப்பினை பயன்படுத்தி, பல மாணவர்கள் தேர்ச்சி அடைந்து அரசு வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.