எப்படி குறைகளை பதிவு செய்யலாம் ?
உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைக்க, நீங்கள் பதிவு செய்வதற்கான ஒரே தளம்.
பொதுமக்களின் குறைகளை தீர்க்க மற்றும் கண்காணிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட கணினி முறைமை. இது DPG மற்றும் DAR&PG அமைப்புகளுடன் தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட வலைத்தள இணைய வழிச்சேவையாகும்.
பாதிக்கப்பட்ட எந்த ஒரு குடிமகனும் எங்கிருந்தேனும், எந்த நேரத்திலும் (24×7) தங்கள் குறைகளை அமைச்சகத்திற்கோ, இயக்குனகரகத்திற்கோ அல்லது நிறுவனத்திற்கோ செலுத்தி அதற்கான தீர்வை விரைவாகவும், சாதகமாகவும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வலைத்தளத் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி உருவாக்கப்பட்ட செயலி இது. தங்கள் குறைகளை பதிவுச் செய்யும் பொழுது இச்செயலித் தரும் தனிப்பதிவு எண் துணை கொண்டு தங்கள் குறை மேல் எடுத்து வருகின்ற நடவடிக்கைகளை கண்டறியும் வசதி இவ்வலைத்தளத்தில் உள்ளது.
கீழ் காணும் பிரச்சனைகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- எந்த ஒரு நீதிமன்றத்தாலும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்லது தீர்ப்பைப் பற்றிய ஏதாவது விஷயம்
- தனிப்பட்ட மற்றும் குடும்ப தகராறுகள்
- RTI செய்திகள்
- நாட்டின் ஒற்றுமைக்கோ அல்லது பிற நாடுகளுடனான நட்புறவுக்கோ செயல் விளைவு ஏற்படுத்தக்கூடியவை.
- ஆலேசனைகள்
பார்க்க: https://pgportal.gov.in
ஊழியர்கள், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
புது தில்லி
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : காரைக்கால் | அஞ்சல் குறியீட்டு : 609602