மூடு

தரங்கம்பாடி

வழிகாட்டுதல்
வகை வரலாற்று சிறப்புமிக்கது

தரங்கம்பாடி : தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து வடக்கு நோக்கி 13 கி.மீ. தொலைவில் கிழக்கு கடற்கரைச்சாலையில் அமைந்துள்ள பழம் பெருமை வாய்ந்த ஊர்.  தரங்கம்பாடி எனற பெயருக்கு அலைபாடும் என்று பெயர்க்காரணம் கூறுவதுண்டு. இவ்வூரின் கடற்கரையில் ஓசோன் காற்று வீசுவதாகவும் கூறுவார்கள்.

மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் நிலம் வழங்கப்பட்டு, 1306 ஆம் ஆண்டு மாசில்லாமணி நாதர் கோவில் கடற்கரை ஓரம் கட்டப்பட்டது.  டேனிஷ் குடியேற்றத்திற்குப்பின் 1620 இல், டேன்ஸ்போர்க் என்னும் பெயரில் கோட்டை ஒன்று கட்டப்பட்டது. இவ்விரண்டும் இன்றளவும் இவ்வூர் பழமையை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

மற்றுமோர் முத்தாய்ப்பாக இந்தியாவிலேயே இங்குதான் முதல் பத்திரிக்கை அச்சகம் 1714 இல் டேனீஷாரால் நிறுவப்பட்டு தமிழ் மொழியில் புதிய ஆய்வுகள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

புகைப்பட தொகுப்பு

  • தரங்கம்பாடி டேன்ஸ்பர்க் கோட்டை
  • நாகூர் ஆண்டவர் தர்கா
  • அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை.

தொடர்வண்டி வழியாக

அருகிலுள்ள ரயில் நிலையம் காரைக்கால் (13 கி.மீ.) மற்றும் மயிலாடுதுறை (29 கி.மீ.)

சாலை வழியாக

சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஈ.ஆர்.சி.