மூடு

புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம்

வழிகாட்டுதல்
வகை மதம் சார்ந்த

வேளாங்கண்ணி ஒரு புகழ்பெற்ற கிறித்தவ புனித யாத்திரை தலம். இது, கிழக்கு கடற்கரைச்சாலையில், காரைக்காலில் இருந்து தெற்கு நோக்கி 26 கி.மீ. தெலைவில் தமிழகத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வேளாங்கண்ணியில் வீற்றிருக்கும் புனித அன்னை மேரி ஆலயம், நாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையத்தில் ஒன்றாகும். இது “கிழக்கின் லூர்து” என பிரபலமாக அறியப்படுகிறது. அதன் தோற்றங்கள் 16 ஆம் நூற்றாண்டிற்கு முந்தியிருக்கலாம்.

வருடந்தோறும், 20 மில்லியன் யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் இக்கோவிலுக்கு வருகை புரிகின்றனர். இங்கு, ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் 3 மில்லியன் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் அன்னையின் திருவருளை பெற வேண்டி நடை பயணமாகவே இவ்வாலயத்தை அடைவது மேலும் சிறப்பு. திருவிழாவின் 11-வது நாளான செப்டம்பர் 8 ஆம் தேதி விழா கொண்டாட்டத்துடன் இனிதே முடிவடைகிறது.

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி 160 கி.மீ. சென்னை 300 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

வேளாங்கண்ணி ரயில் நிலையம் நாகப்பட்டினம் வரை 10 கி.மீ. தொலைவில் உள்ளது

சாலை வழியாக

பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், எர்ணாகுளம், மதுரை, நாகர்கோவில், சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (டி.என்.எஸ்.டி.சி), மாநில எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (தமிழ்நாடு) மற்றும் பல தனியார் பஸ் ஆபரேட்டர்கள். கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம், சாங்கநேசரிக்கு தினசரி பஸ் சேவையை இயக்குகிறது.