மூடு

அமிர்தகடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

வழிகாட்டுதல்
வகை மதம் சார்ந்த

சென்னையிலிருந்து 265 கி.மீ.  மற்றும் காரைக்காலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கடையூர் அமர்தகடேஸ்வரர் – அபிராமி அம்மன் ஆலயம் சைவக்குரவர்கள் நால்வரால் பாடப்பெற்ற சிவத்தலங்களுள் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும். மேலும் இத்தலம், அபிராமி பட்டர், மார்கண்டேயர் புராணங்களுடன் தொடர்புடைய தலமாக விளங்குகிறது.

ஆயுள் விருத்திக்காக பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறுவது இக்கோவிலின் மற்றுமோர் நடைமுறை சிறப்பு. அவையாவன, 60 வது வயதில் சஷ்டியப்தபூர்த்தி, 70 வது வயதில் பீமரத சாந்தி, 80 வது வயதில்  சதாபிஷேகம். இவ்வகையான ஆயுள் விருத்தி ஹோமங்கள் இத்திருத்தலத்தில் பக்தர்களால் அன்றாடம் நடைபெறுகிறது.

புகைப்பட தொகுப்பு

  • தரங்கம்பாடி டேன்ஸ்பர்க் கோட்டை
  • நாகூர் ஆண்டவர் தர்கா
  • அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம்

அடைவது எப்படி:

வான் வழியாக

அருகில் உள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளி (150 கி.மீ.) மற்றும் சென்னை விமான நிலையம் 300 கி.மீ.

தொடர்வண்டி வழியாக

அருகில் உள்ள ரயில் நிலையம் வடக்கு மற்றும் மேற்குகளிலிருந்து மயிலாடுதுறை ஆகும். தெற்கு மற்றும் காரைக்கால்.

சாலை வழியாக

இது சிர்காலிக்கும் காரைக்காலுக்கும் இடையில் ஈ.ஆர்.ஆர்.யில் அமைந்துள்ளது.