மூடு

அடைவது எப்படி

வான் வழி : காரைக்காலை வந்தடைவதற்கு திருச்சிராப்பள்ளி விமான நிலையம் மிக அருகாமையிலுள்ளது. இது தோராயமாக 150 கி.மீ இருக்கும். சென்னை விமான நிலையம் 275 கி.மீ தொலைவில் உள்ளது.

இருப்புப்பாதை : கீழ்காணும் ஊர்களிலிருந்து புகை வண்டி வாயிலாக காரைக்காலை வந்து சேர வசதி உள்ளது.

  • சென்னை (Train No.16175),
  • தஞ்சாவூர் (Train No.76812),
  • திருச்சிராப்பள்ளி (Train No.56714, 06852),
  • வேளாங்கண்ணி(Train No.76818),
  • எர்ணாகுளம் (Train No.16188),
  • பெங்களூர்(Train No.56514) and
  • மும்பை  (ஞாயிறு மட்டும்- Train No.11017).

சாலை வழி : காரைக்காலில் இருந்து  சாலை வழியாக கீழ்கண்ட ஊர்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உண்டு.

மேற்கு நோக்கி

  • திருநள்ளார் – 5 kms.
  • கும்பகோணம் – 57 kms.
  • தஞ்சாவூர் – 98 kms.,
  • திருச்சிராப்பள்ளி-145 kms.,
  • கோயம்புத்தூர்
  • ஈரோடு

தென்மேற்கு நோக்கி

  • திருவாரூர்-40 kms.,

வடமேற்கு நோக்கி

  • மயிலாடுதுறை-40 kms.

கிழக்கு கடற்கரை சாலையில் வடக்கு நோக்கி

  • சிதம்பரம்- 64 kms.,
  • புதுச்சேரி-135 kms.,
  • சென்னை-294 kms.,

கிழக்கு கடற்கரை சாலையில் தெற்கு நோக்கி

  • நாகூர்-15 kms.,
  • நாகப்பட்டிணம்-20 kms.
  • வேளாங்கண்ணி-30 kms.,

புதுவை அரசின் புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகம், தமிழக அரசின் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களும் மேற்கூறிய ஊர்களுக்கு தங்கள் பேருந்துகளை இயக்குகின்றன.

இது தவிர, உள்ளூர் பிரயாணங்களுக்கு நகரப்பேருந்துகள், சிற்றுந்துகள், சிறிய பேருந்துகள், ஆட்டோ ரிக் ஷா வசதிகளும் உள்ளன.

அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சொகுசு ரக பேருந்துகளும் வெளி மாநிலங்களுக்குச் செல்ல இயங்கி வருகின்றன.