நல
சமூகநலத்துறை
அடித்தட்டு மக்கள், உடல் ஊனமுற்றோர், பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், மதுவுக்கு அடிமையானவர்கள் மற்றும் வயதானவர்கள் ஆகியோரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் நல உதவிகளை இத்துறையானது மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது.
மக்கள் மற்றும் குழந்தைகள் நலம்
இதனுடைய நோக்கம் மகளிர், குழந்தைகள், முதியோர்கள், ஏழைகள் ஆகியோருக்கு பொருளாதாரம் மற்றும் சத்துணவு ஆகியவற்றை அளித்து அவர்கள் வாழ்வை மேம்படுத்துதல். காரைப் பகுதியில் ஏறத்தாழ 140 அங்கன் வாடி மையங்கள், 28 பால் வாடி மையங்கள், வேலைக்கு செல்வோர் பெண்கள் தங்கும் விடுதிகள் இதன் கீழ் இயங்கிவருகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை
ஆதிதிராவிடர்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்காக அரசு தரும் நலத்திட்ட உதவிகளை உரிய பயனாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் இத்துறை பெரும் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் :- மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை, கலப்புத் திருமண தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை, தொடர் மருத்துவசிகிச்சைக்கு தேவைப்படும் சில குறிப்பிட்ட நோய்களுக்கான உதவித் தொகை போன்றவை.
தொழிலாளர் துறை
தொழிலாளர் நலனை கருத்தில் கொண்டு அரசு இத்துறையை உருவாக்கி உள்ளது. தொழிலாளர் சம்பந்தமான பிரச்னைகளை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்து வைப்பது இதன் முக்கிய பணியாக அமைந்துள்ளது. இது தொழிற்சாலை சட்ட விழிகள் படி தொழிலாளருக்கு சேரவேண்டிய பலனகளை இது பெற்றுத்தருகிறது. பயிற்சி வகுப்புகள் மூலம் தொழில் நுட்பக்கல்வி பயி ன்றவர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு உறுதுணையாக இது செயல்படுகிறது.