மூடு

கொண்டாட்டம் 2024

 

“காரைக்கால் கார்னிவல் 2024” எதிர்வரும் 14.01.2024 முதல் 17.01.2024 வரை காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்வில் கலை, கலாச்சாரம் மற்றும் கைவினைஞர்கள், இசைக்கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், அவர்களின் பல்வேறு கண்கவர் நிகழ்வுகள் நான்கு நாட்கள் அழைப்பிதழில் கண்டுள்ள நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.

இவ்விழாவில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்வேறு வணிக மற்றும் கலாச்சார அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்கும். கார்னிவல் உணவு திருவிழா, கலை மற்றும் கைவினை கண்காட்சி, மலர்க் கண்காட்சி,நாய்கள் மற்றும் பூனை கண்காட்சி, படகு போட்டி, பட்டம் விடும் திருவிழாமற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியது. காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

நமது மாவட்டத்தின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் 14.01.2024 அன்று மதியம் 03.00 மணி முதல் “கலாச்சார சாலை நிகழ்ச்சி”நடைபெற உள்ளது.

மாவட்டத்தில் விளையாட்டுகளை ஊக்குவிக்க உதவும் கைப்பந்து, கபடி, பாட்மிண்டன், கார்னிவல் ஓட்டம் (மினி மாரத்தான்),டென்னிஸ், புட்ஸால்போன்ற பல விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, நகரத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், முக்கிய சந்திப்புகள் / வணிகப் பகுதிகள் / கடற்கரைகளில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் அனைத்தும் காரைக்கால் மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டங்களை விறுவிறுப்பாகவும், அண்டை மாவட்ட மக்களை காரைக்காலுக்கு ஈர்க்கவும், சுற்றுலாவினை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரைக்கால் கார்னிவல் 2024 காரைக்கால் மாவட்டத்தின் அதிகரித்து வரும் கலாச்சார பன்மைத்துவத்தையும் அதன் விரிவடைந்து வரும் பல்லின சமூகங்களையும் அவர்களின் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஒன்று கூடுவதற்கான சிறந்த வாய்ப்பாகும்.

காரைக்கால்மாவட்ட நிர்வாகம்மற்றும் சுற்றுலாத் துறை,காரைக்கால் மாவட்டபொதுமக்கள்மற்றும் அருகிலுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் “காரைக்கால் கார்னிவல் 2024” கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

ஒன்றுபடுவோம், கைகோர்ப்போம், நமது கலாச்சார பிணைப்பை பகிர்ந்துகொள்வோம்;நமது மாவட்டத்தின் வளமான பாரம்பரியம் மற்றும் பன்முகத்தன்மையை விரிவுபடுத்துவோம்.

அனைவரும் வருக!

 

  • சாலை நிகழ்ச்சி
  • கலாச்சார நிகழ்வுகள்
  • விளையாட்டுப் போட்டிகள்
  • கலை மற்றும் கலாச்சாரம்
நாள்
தலைப்பு
கோப்பு
13.01.2024 செய்தி குறிப்பு பார்க்க
11.01.2024 செய்தி குறிப்பு பார்க்க
10.01.2024 கொண்டாட்டச் செய்தி பார்க்க