மூடு

தேர்தல்கள்

பாராளுமன்ற பொது தேர்தலைப் பொறுத்த மட்டில் புதுச்சேரி யூனியன் பகுதி முழுவதும் ஒரே பாராளுமன்றத் தொகுதியாகும். சட்ட மன்ற பொதுத்தேர்தலுக்கு காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் ஐந்து சட்டமன்றத்தொகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன,

  • 24-நெடுங்காடு (தனி)
  • 25-திருநள்ளார்
  • 26-காரைக்கால் வடக்கு
  • 27-காரைக்கால் தெற்கு
  • 28-நிரவி திருப்பட்டினம்.

16 /05 /2016 அன்று கடைசியாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்ட மன்றத்தேர்தல் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் தாங்கள் பதித்த வாக்குகளை சரிபார்க்கும் இணைப்பு இயந்திரத்தை காரைக்கால் தெற்கு சட்டமன்றத்தொகுதியில்  மட்டும் அறிமுகப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, 18 04 2019 அன்று நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத்தேர்தலில் காரைக்கால் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் தாங்கள் பதித்த வாக்குகளை சரிபார்க்கும் இணைப்பு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டுவந்தது.