மூடு

கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைகள் நலன்

காரைக்கால் விவசாயப்பகுதியாக இருப்பதால் கால்நடை எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. காரைக்காலில் ஒரு கால்நடை மருத்துவமனையும் அருகில் உள்ள கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ ஆறு கால்நடை மருந்தகங்களும் செயல்படுகிறது. இதனை நிர்வகிக்க புதுவை அரசு,  கால் நடை பராமரிப்பு மற்றும் கால் நடைகள் நலத்துறையின் பிரிவு ஒன்றை காரைக்காலில்  அமைத்து  அதன்கீழ் மேற்குறிப்பிடப்பட்ட மருத்துமனை மற்றும் மருந்தகங்கள் செயல்படுகின்றன. கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்புக்கான அறிவுரைகளையும், பால் உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் அதை வளர்ப்போர் தங்கள் வருமானத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்கிறது. கூட்டுறவு பால் உற்பத்தி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் காரைப்பகுதி முழுவதும் மக்கள் பயன்பெறும் வண்ணம் அனுப்பப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்போருக்கு அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் மானியங்களை பயனாளிகள் பெற்று பயனுற இத்துறை உதவி செய்கிறது.