மூடு

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை செயல்பாடுகள்

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வருவாய்துறையானது வருவாய், நிலஅளவை, மற்றும் கலால் துறைகளை நிர்வகிக்கிறது. இத்துறைகள் பொதுமக்களுக்கு தேவையான கீழ்காணும்
சான்றிதழ்களையும் அவ்வப்போது காலம் தாழ்த்தாமல் வழங்குகிறது.

  • வழங்கப்படும் சான்றிதழ்கள்.
    நாட்டினம், ஜாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், குடியுரிமை சான்றிதழ், செல்நிலை சான்றிதழ், வருவாய் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்.
  • பட்டா மாற்றுதல்.
  • நிலஅளவை மற்றும் பட்டா உறுதிசெய்தல்,
  • நியாயமான வாடகை நிர்ணயித்தல்,
  • குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டங்களை அமுல் படுத்துதல்,
  • உச்சவரம்புக்கு உட்பட்ட உபரி நிலங்களை தகுந்த பயணாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு அளித்தல்,
  • வீட்டுமனை பட்டா வழங்குதல்,
  • விபத்துக்களால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட நிவாரணம் வழங்குதல்/
    குடிசைப்பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களை ஈடு செய்ய அதற்கான காப்பீடு வழங்குதல்,
  • பத்திரப்பதிவு செய்தல்/திருமணத்தை பதிவு செய்தல்/சீட்டு நிறுவனங்களை ஒழுங்கு படுத்துதல்,
  • எடைகளையும் அளவுகளையும் சரிபார்த்தல்.

கீழ்காணும் தொழில்களுக்கான உரிமம் வழங்குதல்.

  • திரைப்பட அரங்குகளுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்,
  • அடகுகடை நடத்த உரிமம் அளித்தல்,
  • படைக்கலம் உரிமம் அளித்தல்,
  • வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் உரிமம் மற்றும் தடையில்லா சான்றிதழ் கொடுத்தல்
  • கடன் கொடுப்பவர் மற்றும் வட்டித்தொழில் செய்பவருக்கான உரிமம் வழங்குதல்,
  • நில எண்ணெய் விற்பதற்கான தடையில்லா சான்றிதழ் அளித்தல்,

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்துதல் மற்றும் அது தொடர்பான கீழ்காணும் பணிகளை மேற்கொள்ளுதல்.

  • வாக்காளர் பட்டியல் தயார் செய்தல்,
  • வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல்,
  • வாக்காளர் பட்டியல் தயார் செய்து வெளியிடுதல்.

வருவாய் துறையின் இதர நடவடிக்கைகள்.

மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையானது இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு உடனடி தேவைகளை அளித்து அவர்களை பாதுகாக்கிறது. குறிப்பாக வறட்சி, வெள்ளம், தீவிபத்து போன்ற நிகழ்வுகளில் இதன் பணி மகத்தானது. புயல், வெள்ளம், மழை நேரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் தேவையானவற்றை வழங்குதல். பாதிக்கப்பட்ட குடிசைகளை சீர்செய்ய தேவையான பண உதவி அளித்தல்.

கீழ்கண்ட துணை அலுவலகங்களுக்கு ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்படுதல்.

  • நிலஅளவை மற்றும் நிலத்தீர்வுமுறை அலுவலகம்
  • எடை மற்றும் அளவுகள் சரிபார்க்கும் அலுவலகம்
  • காரைக்கால், நிரவி மற்றும் திருபட்டினத்தில் இயங்கும் சார்பதிவாளர் அலுவலகம்.