விடையூழியம்
- காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்துத் துறைகளையும் ஒன்றிணைத்து மாவட்டத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. புதுவை யூனியன் பிரதேசத்தின் ஏனைய மூன்று பகுதிகளான புதுவை, மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் புதுவைக்கு அடுத்த படியாக மக்கட்தொகை அடிப்படையிலும் நிலப்பரப்பு விகிதத்திலும் இது புதுவைக்கு அடுத்த இடத்தை பிடிக்கிறது.
- மாவட்ட ஆட்சியர் அவர்கள் மேதகு துணை நிலை ஆளுனரின் பிரதிநிதியாக செயல் படுவதுடன் இங்குள்ள அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்ல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
- காரைக்கால் மாவட்ட மின்-ஆளுமை குழுமத்தின் தலைவராக செயல்படுவதுடன் மின்-ஆளுமை திறம்பட செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- இப்பகுதியில் அரசின் மூலம் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய அதனை சரிவர கவனித்து முறைபடுத்தவும் ஆவண செய்கிறார்.
- மாவட்ட ஆட்சியர் அவர்கள் காரை மாவட்டத்தின் நீதிபதி பதவியையும் தன் பணியுடன் சேர்த்து கவனிக்கிறார். இதன் மூலம் காரைக்காலில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டி பராமரிக்கப்படுகிறது.
- இயற்கை பேரிடர் காலங்களில், மக்களை பெருந்துயரிலிருந்து பாதுகாக்கும் வண்ணம், அதனை எதிர்கெண்டு சமாளிக்க அவசர குழுக்களை அமைத்து மக்களின் துயர்துடைக்க வழிவகை செய்கிறார்.
- காரைப்பகுதிக்கு வருகை தரும் மத்திய, மாநில மற்றும் வெளிநாட்டு மிகமுக்கிய நபர்களை மேதகு துணைநிலை ஆளுனர் சார்பில் காரை மாவட்டத்தலைமை என்ற அடிப்படையில் அரசு முறை வரவேற்பு அளிக்கிறார்.
- காரைக்கால் மாவட்டத்தில் ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறவும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் காரைப்பகுதி ஒரு முன்மாதிரி மாவட்டமாக திகழ நடவடிக்கை எடுக்கிறார்.